உள்ளுராட்சி சபை குப்பை சேகரிக்கும் உழவு சாரதியின் நெகிழ்ச்சி செயல்!

0
137

உள்ளூராட்சி சபைகளில் குப்பை சேகரிக்கும் உழவு இயந்திர சாரதியாக 39 வருடங்கள் பணியாற்றியவர் ஓய்வுபெறவுள்ளார். இந்த நிலையில் தனது உழவு இயந்திரத்தை வழிபட்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அம்பகமுவ, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் குப்பை சேகரிக்கும் உழவு இயத்திரத்தின் சாரதியான கனகரத்தினம் என்பவரே இவ்வாறு உழவு இயந்திரத்தை வழிபட்டவராவார்.

இந்நிலையில் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் சாரதியின் இந்த செயலுக்கு பாராட்டுக்களையும், நெகிழ்ச்சியையும் பதிவிட்டு வருகின்றனர்.