யாழ்.கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள்வெட்டு; டென்மார்க்கிலிருந்து கூலிப்படைக்கு பணம்!

0
88

யாழ்.கல்வியங்காட்டில் ஜனவரி மாத நடுப்பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்துவதற்கு டென்மார்க்கில் இருந்து கூலிப்படைக்கு பணம் அனுப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

 முரண்பாடு

பாடசாலை அபிவிருத்திச் சங்க முரண்பாடு காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழி நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கைது மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள்வெட்டு; டென்மார்க் இருந்து கூலிப்படைக்கு வந்த பணம்! | Jaffna Sword Slash On Trader Money From Denmark

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கோப்பாய் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் லக்சாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஜீவன்பாய் (சஜூவன்), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஸ்ணன் மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 26 வயதுடைய சுதர்சன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர்.

முன்பகை காரணமாக இந்த அடாவடி மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள்வெட்டு; டென்மார்க் இருந்து கூலிப்படைக்கு வந்த பணம்! | Jaffna Sword Slash On Trader Money From Denmark

மூவருக்கு வலைவீச்சு

சம்பவம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் வைத்து 22 வயதுடைய சிந்துஜன் என்ற முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வா என்பவர் பணம் அனுப்பியே வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் 7 பேர் தொடர்புடைய நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவர் தேடப்படுவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.