இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்

0
87

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை(02.02.2023) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பெப்ரவரி 3-4 திகதிகளில் கொழும்பில் நடைபெறும் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் இலங்கை வருகிறார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் பௌத்யால் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு

பெப்ரவரி 3 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார விழாவில் அவர் பங்கேற்கவுள்ளார்.

காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நேபாள வெளிவிவகார அமைச்சர் பௌடெல், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார்.

இதன் பின்னர் அவர் பெப்ரவரி 5ஆம் திகதியன்று காத்மண்டு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.