ஜேர்மனியில் கிரீமுக்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண் உயிரிழப்பு!

0
329

கடந்த ஓகஸ்ட் மாதம் தெற்கு ஜேர்மனியில் கார் ஒன்றில் அழகிய இளம்பெண் ஒருவரின் கண்டுபிடிக்கப்பட்டது. அது Sharaban K (23) என்னும் பெண்ணுடைய உடல் என அவரது பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது.

Ingolstadt என்ற இடத்தில் மெர்சிடிஸ் காரில் கண்டுபிடிக்கப்பட்ட Sharaban என்னும் அந்தப் பெண் ஈராக் நாட்டவர் ஆவார். அவர் முனிச் (Munich) நகரில் வாழ்ந்து வந்தார் என தெரிய வந்துள்ளது.

மகள் எதனால் கொல்லப்பட்டார் என பெற்றோர் தேடிய நிலையில் உடற்கூறு ஆய்வு சில அதிர்ச்சியளிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தியது.

Sharaban

அதாவது அந்த உடல் Sharaban உடையதே அல்ல. அது Khadidja (23) என்னும் அழகுக்கலை நிபுணருடைய உடல். அந்த அல்ஜீரியா நாட்டு இளம்பெண் Heilbronn என்ற இடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

பொலிஸாரின் தீவிர விசாரணையில் கொல்லப்பட்டது Khadidja என்னும் பெண் என்றும் அவரைக் கொன்றதே Sharaban தான் என்பதும் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து பவேரிய பொலிசாரால் Sheqir K (23) என்பவரும் Sharabanம் கைது செய்யப்பட்டார்கள்.

தொடர் விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக தலைமறைவாக இருந்த Sharaban, தன்னைப் போலவே காணப்படும் வேறொரு அழகிய இளம்பெண்ணைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் அழகு கிரீம் ஒன்றை இலவசமாகத் தருவதாக ஆசை காட்டி தன்னைப்போலவே காணப்படும் பல இளம்பெண்களை தொடர்பு கொண்டுள்ளார் Sharaban.

அழகுக் கிரீமுக்கு ஆசைப்பட்ட Khadidja, Sharaban ஐ சந்திக்க சம்மதம் தெரிவிக்க அவரை காரில் ஏற்றிக்கொண்டு மரங்கள் அடர்ந்த ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்து முகத்தை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைத்து Sheqirம், Sharabanம் அவரது உடலை Sharabanஇன் காரின் பின் இருக்கையில் வைத்து காரைக் கொண்டு ஆளரவமற்ற ஒரு இடத்தில் விட்டு தலைமறைவாகிவி உள்ளார். 

Sheqir

வித்தியாசமான இந்த வழக்கு ஜேர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் Sheqir, Sharaban இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.