தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், வரிசை படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் உள்பட படக்குழுவினர் காஷ்மீர்க்கு சென்றுள்ளதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பில் விஜய், லோகேஷ் விமான நிலையத்தில் இருக்கும் வீடீயோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
இதேவேளை, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்த படக்குழு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், முதலாவதாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதை அறிவித்தனர். அவர் நடிக்க உள்ள முதல் தமிழ் படம் இது என்பது குறிப்படத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக நடிகை பிரியா ஆனந்த், விஜயின் 67 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள தகவலை வெளியிட்டனர். இவரும் விஜய் உடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இந்நிலையில், மூன்றாவது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 67 படத்தில் பிரபல நடன இயக்குநரும், பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.