இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் மத்திரம் மரண தண்டனை தொடர்பான புள்ளி விவர அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் 165 மரண தண்டனைகளை விதித்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை எண்ணிக்கை இதுவே ஆகும்.
மரண தண்டனை வழக்குகளில் 51.28 சதவீத வழக்குகள் பாலியல் குற்ற வழக்குகள் ஆகும். அகமதாபாத் குண்டு வெடிப்பு என்ற ஒரு வழக்கில் மத்திரம் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதிநாள் நிலவரப்படி 539 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
மேலும், மரண தண்டனையை எதிர்நோக்கி வாழும் கைதிகள் எண்ணிக்கை 2015-ம் ஆண்டுக்கு பிறகு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.