கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிப்பு!

0
345

அரச குடும்பத்தை சேராத சாதாரண மனிதனின் 4300 ஆண்டுகள் பழமையான மம்மியை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே உள்ள சக்காராவில் தற்போது அகழாய்வு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் தான் உலகின் மிகப் பழமையான அரசர் அல்லாத சாதாரண மனிதனினான ஹெகாஷெப்ஸ் என்பவரின் மம்மி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தை சேராத 4300 ஆண்டுகள் பழமையான மம்மி; ஆய்வாளர்கள் ஆச்சர்யம்! | 4300 Year Old Non Royal Mummy

தரையின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்த மூன்று கல்லறைகள் தோண்டப்பட்டன.

 தங்க இலையால் போர்த்தப்பட்ட மம்மி

அதில் ஒன்றில் தான் ஹெகாஷெப்ஷ்-ன் மம்மி இருந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அந்த மம்மி தங்க இலையால் போர்த்தப்பட்டிருந்தது. அதோடு அது சிதைவுறாமல் அப்படியே இருந்துள்ளது.

அரச குடும்பத்தை சேராத 4300 ஆண்டுகள் பழமையான மம்மி; ஆய்வாளர்கள் ஆச்சர்யம்! | 4300 Year Old Non Royal Mummy

இந்த மம்மி 4,300 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டத்தை சேர்ந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து தொல்லியல் நிபுணரும் எகிப்தின் முன்னாள் பழமை பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜாஹி ஹவாஸ் கூறுகையில்,

தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ள இந்த மம்மிக்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்கிறார்.