மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை; குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வற்புறுத்தல்

0
139

தந்தையொருவர் தனது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டும் அன்றி குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வற்புறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் (26) ஆம் திகதி அன்று 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

அதன்போது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தாயார் வேலைவாய்ப்புக்கான குவைத்துக்கு சென்றிருந்த வேளையில் 13 வயதாக சிறுமியை அவரது தந்தை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி தனது தந்தை மற்றும் தனது இரண்டு உடன்பிறப்புகளுடன் வசித்து வந்த நிலையில் தனது தந்தையினால் பல தடவை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.