11 மாதங்களாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர்!

0
221

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது.

ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன.