எதிர்வரும் சுதந்திர தினத்தில் போராட்டம்!

0
118

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பு முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை அறிவிக்கவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அன்றைய தினம் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழர்களை கொதிப்படைய வைத்து வீதியில் இறங்கும் நிகழ்வு வடக்கில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வண.எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார். 

சுதந்திர தினத்தன்று போராட்டம் | Protest On Independence Day

அவ்வாறு இருக்க, நாட்டில் தீராத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்நிலையில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தினத்தினை நடத்துவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கடந்த 23ம் திகதி அன்று தனது எதிர்ப்பினை காலிமுகத்திடலுக்கு சென்று தெரிவித்திருந்தார்.

காலிமுகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில் கறுப்பு நாடாக்களை கட்டி தனது எதிர்ப்பினையும், அனைத்து மக்களையும் இதற்காக ஒத்துழைக்குமாறும், சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் வரைய்க்கும் அங்குள்ள தூண்களில், கம்பிகளில் கறுப்புக் கொடியினை கட்டி எதிர்ப்பினை தெரிவிக்குமாறும் அவர் அன்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.