போதைப்பொருள் சாப்பிட மறுத்த மாணவியை அடித்து துன்புறுத்திய சக மாணவிகள்..! அதிர்ச்சி வீடியோ…

0
66

பாகிஸ்தான், லாகூரில் பள்ளி மாணவியை சக மாணவிகள் அடித்து துன்புறுத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவியை அடித்து சித்ரவதை செய்த சக மாணவிகள்

பாகிஸ்தான், லாகூரில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒரு மாணவி தனது வகுப்பு தோழிகளால் அடித்து சித்திரவதை செய்யப்படுகிறார். பாதிக்கப்பட்ட பெண் தரையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.

2 சிறுமிகள் அவளைக் கீழே தள்ளி, மாணவி மீது ஏறி அமர்ந்து முடியை பிடித்து அடிக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், போதைப்பொருளை சாப்பிட மறுத்ததற்காக மாணவியை சக மாணவிகள் சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியையும் குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் பறித்துச் சென்றதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக லாகூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சக மாணவிகள் லாகூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தை முன்ஜாமீன் கோரி அணுகியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.