இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு! ஒருவர் கைது (Photo)

0
70

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20.01.2023) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 16.1 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஹொரவ்பொத்தானை – நெலுகொள்ளாவ பகுதியில் வசித்து வரும் கபில குமார் த சில்வா (41 வயது) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வீடு சுற்றிவளைப்பு

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபரின் வீடு சுற்றிவளைக்கப்பட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளுடன், சந்தேகநபரை இன்றைய தினம் கெப்பித்திக்கொள்ளாவ நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.