உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி அலுவலத்தின் தலைவர் உயிரிழந்தவர்களில் 453 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலம் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

அதேநேரம் ரஷ்யா 80 ஆயிரம் குற்றங்களை இழைத்துள்ளதாக யெர்மக் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு குற்றவாளியும் பொறுப்புக் கூறப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர், உக்ரைன் ஒரு சிறப்பு சர்வதேச நீதிமன்றத்தை விரும்புகிறது எனவும் வலியுறுத்தினார்.
மேலும் ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடும் கோரப்பட்டது.