மிக விரைவில் இரு நாடுகளாக இலங்கை பிளவுபடும்!

0
137
Map of Sri Lanka. Detail from the World Atlas. Selective Focus.

நாடு மிக விரைவில் இரண்டாகப் பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதிமொழி வழங்கியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உறுதிமொழி மூலம் நாடு விரைவில் பிளவடைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வடக்கின் பிரிவினைவாத ஜாதி அடிப்படையிலான அரசியல்வாதிகளின் அபிலாஷை நிறைவேறினாலும் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் நாடு இரண்டாக பிளவடையும்! | Very Soon The Country Will Be Divided Into Two

இந்நிலையில் ஒட்டுமொத்த நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மூலோபாய ரீதியான தீர்வுத் திட்டங்கள் எதனையும் இதுவரையில் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டுவதன் மூலம் இனவாத ஓர் அரசியல் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கிலானது என தெற்கு ஊடகங்களிடம் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.