பிரிட்டனில் போராட்டம் இரட்டிப்பாகும்; தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

0
84

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பெப்ரவரியில் தாதியர்களின் வேலைநிறுத்தம் இரட்டிப்பாகும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

ஜனவரி இறுதிக்குள் ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டால், புதிய வெளிநடப்புகள், அறிவிக்கப்படுமு; என ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் யூனியன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வுக்கோரி வேலைநிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குறைந்தபட்ச சேவையை வழங்குவதற்கு ரிஷி சுனக்(Rishi Sunak) அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.