பிரித்தானிய கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகரிப்பு…

0
327

பிரித்தானிய கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான கட்டணம் அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமுலுக்கு வரும் கட்டண உயர்வு

பிப்ரவரி 2ம் திகதியில் இருந்து அமுலுக்கு கொண்டுவரப்படும் இந்தக் கட்டண உயர்வானது, புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையமூடாக விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டுகளுக்கு கட்டணம் 75.50 பவுண்டுகளில் இருந்து இனி 82.50 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறார்களுக்கு 49 பவுண்டுகளில் இருந்து 53.50 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கப்படும் கடுவுச்சீட்டுகளுக்கு 85 பவுண்டுகளில் இருந்து 93 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு 58.50 பவுண்டுகளில் இருந்து 64 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராணியாரின் பெயரிலேயே வெளியாகும்

கட்டண அதிகரிப்பானது குறித்த சேவையை வழங்கும் பணிகளை மேம்படுத்த உள்விவகார அமைச்சகத்திற்கு உதவியாக இருக்கும் என்றே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டண உயர்வானது அரசுக்கான வருவாயாக ஒருபோதும் இருக்காது என்றே தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வானது கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கான செலவிற்கும், வெளிநாட்டு தூதரக உதவி பெறுவதற்கும், திருட்டு மற்றும் தொலைந்துபோன கடவுச்சீட்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பிரித்தானிய கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் பாரிய மாற்றம்: அனைவரும் பாதிக்கப்படலாம் | British Passport Applications Huge Change

மேலும், கடவுச்சீட்டு சேவையை மேம்படுத்த அரசுக்கும் உதவும் வகையில் இந்தக் கட்டண உயர்வு அமையும் என கூறுகின்றனர். மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்துக் கடவுச்சீட்டுகளும் மறைந்த ராணியாரின் பெயரிலேயே வெளியாகும் எனவும், 2031 வரையில் செல்லுப்படியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.