10 வயதில் கடலில் எழுதி போட்ட கடிதமா இது! அதிர்ச்சியில் உறைந்த வயோதிபர்…

0
230

சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதமொன்று தற்போது கையில் கிடைத்த சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கடிதம் எழுதும் பழக்கம்

பொதுவாக சிலர் வாழ்க்கையில் முக்கியமான வியடங்களை கடிதமாக எழுதி தண்ணீர் வீசுவதை சிலர் தங்களின் பொழுதுபோக்காக செய்து வருவார்கள்.

இந்த போத்தல்கள் சிலருக்கு தேடுனாலும் கிடைக்காது ஆனால் தண்ணீர் இருக்கும் வேறு ஒருவருக்கு கிடைக்கும்.

இதன்படி, அமெரிக்காவின் கென்டக்கி என்னும் பகுதியை சேர்ந்த ட்ராய் ஹெலர் என்பவர், கடந்த 1985 ஆம் ஆண்டு அவருக்கு பத்து வயதாக இருந்த வேளையில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தை ஒரு அழகான பாட்டிலுக்குள் போட்டு புளோரிடா கடலில் வீசி எறிந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் புயல் போது குப்பைகள் எல்லாம் கரையில் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தது. அப்போது இருவர் இதனை சுத்தம் செய்ய வந்துள்ளார்கள்.

குப்பையில் கிடந்த கடிதம்

10 வயசுல எழுதி கடலில் போட்ட கடிதமா இது! அதிர்ச்சியில் உறைந்த வயோதிபர்...நடந்தது என்ன? | A Bottle Returns To Owner After 37 Years

அந்த சமயத்தில் ஹெலர் எழுதிய கடிதம் உள்ள பாட்டிலில் இருந்து எடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த பாட்டிலை தொடர்ந்து பார்த்துள்ளார்கள்.

அந்தக்கடித்தில், “குறித்த கடித்ததில் எழுதியவர் பெயர் மற்றும் முகவரி என்பன விரிவாக போடபட்டிருந்தது. மேலும், இந்த கடிதத்தை கண்டெடுப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததது.

இதனையடுத்து ட்ராய் ஹெலரை கண்டுபிடித்து குறித்த கடிதத்தை ஓப்படைத்துள்ளார்கள். இதனை பார்த்த ஹெலரும் ஒரு நிமிடம் ஆடிப்போயுள்ளார்.

இந்த பாட்டில் எவ்வளவு தூரம் செல்கிறது என பார்க்க தான் இவ்வாறு செய்தேன் திரும்பி வந்ததது எனக்கு ஆச்சியர்மாக இருக்கிறது எனவும் தெரிவத்துள்ளார்.