ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெற தடை!

0
377
A Taliban fighter walks past a beauty saloon with images of women defaced using a spray paint in Shar-e-Naw in Kabul on August 18, 2021. (Photo by Wakil KOHSAR / AFP)

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலீபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

நாடொன்றில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை! | In A Country Women Treatment From Male Doctors

கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வந்தாலும் தலீபான்கள் அதனை பொருட்படுத்துவதாக இல்லை.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது விவகாரங்கள் மற்றும் தலீபான் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில் பெண்கள் இனி ஆண் மருத்துவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

அதன்படி பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் இதனை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.