துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் உயிரிழப்பு!

0
88

சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் ஓடும் லாரியில் ஏறி நடனமாடிய போது கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் இன்று வெளியானது.

இந்த நிலையில் சென்னை ரோகினி தியேட்டரில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு ஏராளமான விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் படம் பார்க்க குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டயைச் சேர்ந்த பரத்குமார் (19) என்பவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்று சொல்லப்படுகிறது.

இவர் துணிவு படத்தை பார்க்க வந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஏறி நடனமாடிய போது கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவர் உடனடியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.