அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்திய சீக்கிய பெண்!

0
437

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்க வுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இன பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் ஏராளமான வழக்குகளில் வாதாடியும் உள்ளார்.

அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்திய சீக்கிய பெண்! | First Indian Sikh Woman Monica Singh Judge In Usa

ஹாஸ்டன் நகரில் பிறந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது பெல்லாரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில் சீக்கிய பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சீக்கிய மக்களுக்கு இது பெருமையை தரும் என அவர் கூறினார்.