பிரதமர் ரிஷி சுனக்கின் ஐந்து வாக்குறுதிகள்.. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

0
391

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தனது புத்தாண்டின் முதல் உரையில், பிரித்தானிய மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ஐந்து வாக்குறுதிகள்

ரிஷி அளித்துள்ள ஐந்து வாக்குறுதிகள் என்னென்னவென்றால், பணவீக்கத்தைப் பாதியாகக் குறைத்தல், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தல், நாட்டின் கடன் சுமையைக் குறைத்தல், மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்தல் மற்றும் ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையாகும்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால்…

ரிஷியின் ஐந்தாவது வாக்குறுதி, சட்ட விரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரை கட்டுப்படுத்துதல் ஆகும்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால்... பிரதமர் ரிஷி சுனக்கின் ஐந்து வாக்குறுதிகள் | Prime Minister Rishi Sunak S Five Promises

அது குறித்து விவரித்த ரிஷி, சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுத்து நிறுத்த புதிய சட்டங்கள் உருவாக்க இருக்கிறோம்.

நீங்கள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், விரைவாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பதை உறுதி செய்வதுதான் எனது ஐந்தாவது வாக்குறுதி என்றார் ரிஷி.