அமெரிக்கா செல்லவிரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

0
296

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமும் இணைந்து, அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளன.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்காவில் சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்பு நடத்தும் நிறுவனத்துடன் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இலங்கையில் ஆட்சேர்ப்பு

இந்த ஒப்பந்தத்தின்படிபதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 200 தாதி உதவியாளர்களுக்கு அங்கு தொழில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்நாட்டில் நடத்தும் என்று அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.