யாழில் நாய் இழுத்துச் சென்ற குழந்தை; தாய் தொடர்பான நீதிமன்ற உத்தரவு!

0
290

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலத்தை நாய் ஒன்று தோண்டி இழுத்து சென்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் நாய் இழுத்துச்சென்ற பச்சிளம் சிசு; தாயார் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | A Woman Who Buried A Baby

முறையற்ற தொடர்பு

முறையற்ற தொடர்பு காரணமாக பிறந்த சிசுவை தனது வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டிலேயே குழந்தையை கடந்த முதலாம் திகதி பிரசவித்த நிலையில் சிசுவை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிசுவை புதைத்த இடத்தை நாய் ஒன்று தோண்டி, சிசுவின் சடலத்தை இழுத்துச் செல்லும் போது அருகில் இருந்த வீட்டின் பெண்ணொருவர் அதனைக் கண்டு முயல் ஒன்றை நாய் இழுத்துச் செல்வதாக நினைத்து அதனைத் தாக்கியுள்ளார்.

யாழில் நாய் இழுத்துச்சென்ற பச்சிளம் சிசு; தாயார் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | A Woman Who Buried A Baby

அதனையடுத்து நாய் குழந்தையை விட்டுச் சென்ற நிலையில், அதனை அவதானித்த பெண் பதறிப்போய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளை அடுத்து சந்தேகத்திற்குரிய பெண்ணையும் கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தான் கர்ப்பிணியாக இருந்ததாகவும் 1ஆம் திகதி சிசுவொன்றை பிரசவித்தாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.