பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கால்பந்து விளையாட்டின் பிதாமகன் ஆன பீலே உடல் நலம் நலிவுற்று மரணம் அடைந்தார். பிரேசில் மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளில் உள்ள கால்பந்து ரசிகர்களும் அவரது மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் பீலேவின் உடல் சான்டோஸ் நகரில் உள்ள மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரண்ட ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று மலர் வளையம் மற்றும் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.