யாழ் நல்லூர் வீதி விடுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

0
477

தனியார் விடுதி ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்தவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் நல்லூர் கோவில் வீதிக்குள் உள்ள விடுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

சிகிச்சை
சம்பவத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

மேலும் தாக்குதலை மேற்கொண்டது யார் என இதுவரை இனங்காணப்படாத நிலையில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.