மக்கள் உதவியை கோரும் பொலிஸ்

0
500

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோரிக்கை
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 065-2056-936 என்ற கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபரம்

சடாச்சரம் தேவலஷ்மி என்ற 47 வயதுடையவரே காணமால்போயுள்ளார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில் தனது மகனுடன் வாழ்ந்துவந்துள்ளார்.

வியாழக்கிழமை (22) வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என இவரது மகன், செவ்வாய்க்கிழமை (27) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.