நாய்க்குட்டிககளின் கழுத்து நெரித்து மரத்தில் தூக்கிலிடப்பட்ட கொடூரம்…நெஞ்சை ரணமாக்கும் புகைப்படம்…!

0
186

டெல்லியில் 2 நாய்க்குட்டிகள் கழுத்து நெரித்து மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2 நாய்கள் கொடூர கொலை

டெல்லி, துவாரகாவில் 2 நாய்க்குட்டிகள் கழுத்து நெரிக்கப்பட்டு, மர்மமான முறையில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்து கிடந்த 2 நாய்களை புகைப்படம் எடுத்து, மிஸ்டிக் மிராஜ் என்பவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கழுத்து நெரிக்கப்பட்ட நாய்க்குட்டிகள் 3 மாத நாய்க்குட்டிகள்.

துவாரகா செக்டார் 9-ல் உள்ள ஆசாத் ஹிந்த் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்துள்ள வெற்று நிலத்தில் நாய்க்குட்டிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார்

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 429 (விலங்கைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாய்குட்டிகளை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் நாய் குட்டிகளுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, மனிதாபமற்ற இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.