இரட்டைக் குடியுரிமையை பெற பலர் ஆர்வம்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்!

0
343

2021 ஆம் ஆண்டில், 5401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும் இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த நபர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 382,560 விமான பயண அனுமதிகளை வழங்கியுள்ளது. அவற்றில், 398 இராஜதந்திர கடவுச்சீட்டுகள் உள்ளன. இது 2020 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, 2020 ஆம் ஆண்டு 209,411 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 175 இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.