கறுப்பு கிறிஸ்மஸ் மரத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்..

0
380

நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு நிற கிறிஸ்துமஸ் மரம் வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முதன்மையானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து ‘சலார்’  படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

Shruti Hassan Black Tree Christmas Celebration with Santanu

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.

Shruti Hassan Black Tree Christmas Celebration with Santanu

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள  வீர சிம்மா ரெட்டி படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.‌ இந்த இரு படங்களும் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளன.

Shruti Hassan Black Tree Christmas Celebration with Santanu

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “எங்களிடமிருந்து உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!! கிறிஸ்துமஸ் தினத்தன்று கருப்பு மரத்தை நட்டு ஒரு வித்தியாசமான கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினோம், ஏனென்றால் நாங்கள் இருவரும் பயணம் செய்வதிலும் வேலை செய்வதிலும் மிகவும் பிஸியாக இருந்தோம், மேலும் நாம் பெற்ற வாழ்க்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்… இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் உண்மையான நன்றியுடன் இருப்பதற்கு ஒரு நொடி எடுத்துக்கொள்வோம். கடினமான மற்றும் அழகான நாட்களில் எங்களை முன்னே அழைத்துச் சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ❤️???? உங்களுக்கும்  மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என ஸ்ருதிஹாசன் பதிவிட்டுள்ளார்.