தபால் மூலம் இலங்கைக்கு வந்த 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள்…

0
266

ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அனுப்பப்பட்ட பொதிகளில் போதைப்பொருட்கள் இருந்தமை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள்

சந்தேகத்துக்கிடமான பொம்மைகள் கொண்ட பொதிகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 பொதிகளை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் 4,673 கிராம் குஷ் மற்றும் 9,586 மாத்திரைகளும் அடங்குவதாக சுங்கத்தினர் தெரிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த பார்சல் ; அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Authorities Parcel From European Countries Shock

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.