இளம் பௌத்த பிக்கு ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

0
437

ஹிந்தகல ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 17 வயதுடைய தேரர் ஒருவர் விஷம் வைத்து கால்வாய்க்குள் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தேரர் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேரர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

அட்டரகம தம்மரதன என்ற இளம் தேரருக்கு இந்த பயங்கரமான கதி நேர்ந்தது. விஷமருந்திய சம்பவத்துடன் மற்றுமொரு பிக்கு தொடர்புள்ளதாக ஊகங்கள் நிலவுவதுடன், பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.