அறிமுக போட்டியிலேயே அசத்திய டெண்டுல்கர் மகன்!

0
264

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தனது அறிமுக ரஞ்சி கிண்ணப் போட்டியில் இன்று (14) சதம் குவித்து அசத்தியுள்ளார்.

கோவா அணி வீரான அர்ஜூன் டெண்டுல்கர், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 207 பந்துகளில் 120 ஓட்டங்களைக் குவித்தார். இப்போட்டி கோவாவின் போர்வோரிம் நகரில் நடைபெறுகிறது.

23 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் விளையாடும் முதலாவது முதல்தரப் போட்டி இதுவாகும். இந்நிலையில் தனது அறிமுக முதல் தரப் போட்டியிலேயே அவர் சதம் குவித்துள்ளார்.

 டெண்டுல்கர் திறமை

ஆர்ஜூன் டெண்டுல்கரின் தந்தையான சச்சின் டெண்டுல்கர், 1988 ஆம் ஆண்டு மும்பை அணி சார்பாக, குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ரஞ்சி கிண்ணப் போட்டியில் 129 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அறிமுகப்போட்டியில் அசத்திய டெண்டுல்கர் மகன்! | Is A Cat Born To A Tiger Tendulkar S Son Century

அதன் மூலம் அறிமுக முதல் தரப் போட்டியிலேயே சதம் குவித்தவரானார் அர்ஜூன் சச்சின்.

அதேவேளை 34 வருடங்களின் பின்னர், இப்போது அர்ஜூன் டெண்டுல்கரும் தனது அறிமுக முதல் தரப் போட்டியில் தந்தை சச்சின் டெண்டுல்கரை பிரதிபலித்துள்ளதாக ரசிகர்கள் கில்லாகித்துள்ளனர்.

இதுவரை பந்துவீச்சாளராகவே திறமையை வெளிப்படுத்தியிருந்த அர்ஜூன் டெண்டுல்கர் இப்போட்டியில் 7 ஆவது வரிசை துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் கோவா அணி 6 விக்கெட் இழப்புக்கு 465 ஓட்டங்களை;ப பெற்றுள்ளது.