பேஸ்புக்கில் பெண்கள் போல் நடித்து இளைஞரிடம் கொள்ளை… இரண்டு பேர் கைது!

0
165

மசாஜ் தொழிலில் ஈடுபடுவதாக முகநூலில் தகவலை பதிவேற்றி , இளைஞர் ஒருவரை களுத்துறை கடற்கரைக்கு வரவழைத்து தாக்கி, மோட்டார் சைக்கிள், அலைபேசி மற்றும் பணத்தை கொள்ளையிட்ட இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 மற்றும் 28 வயதான சந்தேக நபர்கள்

Kaluthara North Police Station-களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம்

களுத்துறை வடக்கு மற்றும் வஸ்கடுவை பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 28 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், முகநூலில் தம்மை பெண்கள் போல் காட்டி, நடமாடும் மசாஜ் சேவையை வழங்குவதாக கூறி இளைஞரை நாகஸ்ஹந்தி கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு வந்த இளைஞனை தாக்கி, மோட்டார் சைக்கிள், அலைபேசி மற்றும் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இளைஞன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர்கள் வஸ்கடுவ வாடியமங்கட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொள்ளையிட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.