ஒரு பந்து பரிமாற்றத்தில் 7 ஆறு ஓட்டங்கள் – ருதுராஜ் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை!

0
586

புதிய உலக சாதனை ஒன்றை 2022ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரின் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார்.

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று(28) இடம்பெற்ற போட்டியில், ஒரு பந்து பரிமாற்றத்தில்(over) 7 ஆறு ஓட்டங்களை அடித்ததன் மூலம்  இந்த சாதனையை படைத்துள்ளார்.

இத்தொடரில் மகாராஷ்டிரா அணி சார்பாக ருதுராஜ் விளையாடிவருகின்றார்.

இரட்டைச்சதம்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உத்தரப் பிரதேச அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மகாராஷ்டிரா அணி 50 பந்து பரிமாற்ற நிறைவில் 5 ஆட்டமிழப்புகளுக்கு 330 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் போட்டியின் இறுதி பந்து பரிமாற்றத்தில்(50ஆவது ஓவர்) தொடர்ச்சியாக 4 பந்துகளுக்கு 4 ஆறு ஓட்டங்களை விளாசினார்.

ஒரு பந்து பரிமாற்றத்தில் 7 ஆறு ஓட்டங்கள் - ருதுராஜ் உலக சாதனை | Cricket India Vijay Hazare Trophy Ruturaj Csk

இதனையடுத்து, ஐந்தாவது பந்திலும் ருதுராஜ்  ஆறு ஓட்டம் ஒன்றை அடித்த போதிலும், அது செல்லுபடியற்ற பந்துவீச்சாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில்,  இறுதி இரண்டு பந்துகளிலும் இரண்டு ஆறு ஓட்டங்களை அடித்தார் ருதுராஜ்.

இதன்படி, ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களை பெற்றதுடன், ஒரு ஓவரில் அணிக்காக 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு  பந்து பரிமாற்றத்தில் ஏழு  ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.