கிரிக்கெட் உட்பட ஏனைய விளையாட்டுத்துறை சம்மேளனங்களில், அந்த துறைகளில் புகழ்பெற்ற வீரர்களை மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்க விளையாட்டு அமைச்சரிடம் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான தேசிய விளையாட்டுசபை இந்த முன்மொழிவை மேற்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில் தமது தலைமையிலான தேசிய விளையாட்டு சபையில், ஏதேனும் வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமானால், செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அர்ஜூன ரணதுங்க பரிந்துரைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவிடம் தமக்கு நம்பிக்கை இல்லை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் அணியை அவர்கள் இறுதிநேரம் வரை பெயரிடவில்லை.
இந்த நிலையில் விளையாட்டு அமைச்சு அல்லது தேசிய விளையாட்டுச்சபை, அதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை.
இதேவேளை விளையாட்டு அதிகாரிகளின் வெளிநாட்டு மகிழ்ச்சிப் பயணங்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
மேலும் விளையாட்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.