மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலியின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரா?

0
37

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதாகி தற்போது சிறையில் உள்ள திலினி பிரியமாலியின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளதுடன், அதற்கான வலுவான மூன்று ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மோசடியில் சிக்கிய திலினி பிரியமாலியின் தந்தை இந்த அரசியல் பிரபலமா? | Is This The Father Of Thilini Priyamali

திலினியின் தாய் இன்னும் உயிருடன் இருப்பதாக தெரிவித்த அவர், இரண்டாவது திருமணத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கணவர் தொழிலில் கொத்தனார் என்றும் கூறுகிறார்.

அதேவேளை மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடனான நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.