சிறப்பு பயிற்சி பெற்ற நாய் பலி

0
55

போதை பொருளை கண்டறிவதில் விசேட தேர்ச்சி பெற்றிருந்த நாய் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது காலி பொலிஸ் நிலையத்தின் உத்தியோகபூர்வ நாய் பிரிவில் உள்ள விசேட திறமைகளை வெளிப்படுத்திய என்றும் நேற்று சுகவீனம் காரணமாக அந்த நாய் இறந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது லிஸ்டா (1371) என்ற நாய் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்த லிஸ்டா ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு அன்று காலி பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்காக சேர்க்கப்பட்டது.

போதைப்பொருள் சோதனைக்கு விசேட பயிற்சி பெற்ற லிஸ்டா இதுவரை 300க்கும் மேற்பட்ட ரெய்டுகளில் பங்கேற்றுள்ளது. ஹெராயின், ஐஸ், மரிஜுவானா உள்ளிட்ட மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதில் லிஸ்டா கில்லாடி.

போதைப்பொருள் கண்டுபிடிப்பதில் விசேட திறமையை வெளிப்படுத்திய லிஸ்டா, இலங்கையில் உள்ள தொலைக்காட்ஸ் ஒன்றில் ஒளிபரப்பான “கேங் ஆஃப் செவன்” என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்ததன் மூலம் இலங்கை மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று பிற்பகல் காலி பொலிஸ் மைதானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.