வவுனியாவில் பொலிஸ் வேடத்தில் போலி நாடக நடிகர்!

0
100

வவுனியா மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்திய நாடக நடிகர் ஒருவர் நீல நிற இரத்தினக்கல்லை மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பிரபல தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா குமாரி பெரேராவின் முகவரான தொலைக்காட்சி நாடக நடிகர் என லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொலிஸ் வேடத்தில் போலி ஆசாமி! | Fake Killer In Vavuniya Police Role

தொலைக்காட்சி நாடக நடிகர்

பொலிஸ் வேடத்தில் பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துவரும் மினுவாங்கெட்ட வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.எம். குணரத்ன பண்டார என்ற நபரே கைதாகியுள்ளார் .

நடிகை மஞ்சுளா குமாரி பெரேரா, லக்கல தேவலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுரங்க அகழ்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.

வவுனியாவில் பொலிஸ் வேடத்தில் போலி ஆசாமி! | Fake Killer In Vavuniya Police Role

அந்த நடிகையின் பிரதிநிதியே கைதான துணைத் தொலைக்காட்சி நடிகராவார். அத்துடன் அந்த நாடக நடிகர் வவுனியாவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தான் என பல மாதங்களாக பிரதேசவாசிகளை ஏமாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.