சீனாவில் நான்கு கால்களில் நடக்கும் மாணவர்கள்; இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

0
89

சீனாவில் உள்ள மாணவர்கள் நடப்பதற்கு பதிலாக தரையில் தவழ்ந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நான்கு கால்களில் ஊர்ந்து செல்வது ஒரு தனித்துவமான பயிற்சியாகும், இது மனித பரிணாமக் கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய மக்களைத் தூண்டுகிறது என்று கூறப்படுகின்றது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) இன் அறிக்கையின்படி பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஊர்ந்து சென்ற காணொளி வெளியான பிறகு, நாடு முழுவதும் இந்த புதிய போக்கு தொடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் வைரலான இந்த தவழ்ந்து செல்லும் பழக்கம், மாணவர்கள் தங்கள் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதைக் காட்டுகிறது.இது நாற்கர இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் விலங்குகள் போல் நடந்து செல்கின்றனர்.

செய்திகளின்படி, இந்த செயல்பாட்டில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இது ஒரு பழமையான பயன்முறையை மீண்டும் செய்வதாலும், வித்தியாசனமானதாகவும் இருக்கிறது.

உடலின் அனைத்து உறுப்புகளும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது உடல் எடையை குறைக்க பயன்படுமா என்ற கேள்விகளும் எழுகிறது. ஆனால், இது சுவாரஸ்யமாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கிறது.