15 ஆண்டுகளில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர் கைது!!

0
395

15 ஆண்டுகளில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர் 40 ஆண்டுகளின் பின் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் 1985 – 2001 வரையிலான 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இடம் பெற்றுள்ளது.

இதன் ஆரம்ப கட்ட விசாரணையில் இதில் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. பின் டி.என்.ஏ சோதனை மூலம் இதன் குற்றவாளி கீத் சிம்ஸ் என்பது தெரிய வந்துள்ளது.

ஆரம்ப கட்டத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001ம் ஆண்டு 12 பாதிக்கப்பட்ட நபர்களின் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது இதன் முடிவுகள் ஒரே மாதிரியானது என்பது தெரிய வந்ததை அடுத்து மற்ற 19 சம்பவங்களையும் பொலிஸார் இதனுடன் இணைத்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 14 – 55 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது.

பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த நபரின் அங்க அடையாளங்களை கூறியுள்ளனர்.

160 – 180 செ.மீ உயரம் கொண்டவர், கருமையான நிறமுடையவர், பழுப்பு நிற கண்கள், அகன்ற மூக்கு கொண்டவர் என்ற ஒரே மாதிரியான அடையாளங்கள் கூறி உள்ளனர்

அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் புலனாய்வாளர்கள் பொலிஸார் தரவுத்தளத்தில் இது தொடர்பான டி.என்.ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர் .

அதையடுத்து கடந்த செப்டம்பரில் சிம்ஸிடமிருந்து ஏற்கெனவே இருந்து எடுக்கப்பட்டிருந்த டி.என்.ஏ மாதிரி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றுடன்  பொருத்தமாக இருப்பது கண்டறிந்துள்ளனர்.

கீத் சிம்ஸ் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சிம்ஸ் மிகவும் விரும்பத்தகுந்த தந்தை, தாத்தா மற்றும் சமூக உறுப்பினர் என குடும்ப மற்றும் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.