இதைமட்டும் மகாலட்சுமி பாத்தா என்ன கொன்னுடுவா? ரெண்டே மாசத்தில் ரவீந்தர் புலம்பல்…

0
98

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் விமர்சகராகவும் திகழ்ந்து வருபவர் ரவீந்தர். கடந்த செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவர்ம் திருமணம் விசயம் மிகப்பெரியளவில் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டும் வந்தது.

மகாலட்சுமி ரவீந்தர்

இதுகுறித்து விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் திருமணத்திற்கான விளக்கத்தை கொடுத்து வந்தார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதிகள். மேலும் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார்கள்.

இப்படி பிஸியாக இருக்கும் மகாலட்சுமி வயிற்றை பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் வைரலானது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஞாயிற்று கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர்.

மைலோ நாய்

இந்நிலையில் ரவீந்தர் தான் வளர்த்து வரும் மைலோ நாய் தன் வயிற்றில் படுத்திருப்பதை புகைப்படத்தோடு இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நான் வாட்டர் பெட் இல்லை மைலோ.. அவ பார்த்தா கொன்னுடுவா, உன்னை இல்லை என்ன கொன்னுடுவா என்று பயத்துடன் பதிவினை போட்டுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் மகாலட்சுமின்னா அவ்வளவு பயமா என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.