பத்தே நாளில் கசந்த திருமணம்… லவ் டுடே பட ஸ்டைலில் ‘மாமாகுட்டி’யுடன் எஸ்கேப் ஆன மணப்பெண்!

0
85

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான படம் லவ் டுடே. யுவன் சங்கராஜா இசையில் இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு ரெட் ஜெயண்ட் வெளியீட்டால் சுமார் 65 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை புரிந்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கு மொழியில் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் காதலியின் அப்பாவால் காதலர்களின் செல்போன் மாற்றிக் கொடுக்கப்பட்டு அதில் வரும் பின்விளைவுகள், பாய் பெஸ்ட்டியால் காதலன் காண்டாடும் சம்பவங்களை படு நேர்த்தியாக பிரதீப் இயக்கி நடித்து கொடுத்திருப்பார்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் திருமணமான மாப்பிள்ளை 10 நாளில் கசந்து போனதால் மணப்பெண் காதலித்த நபரோடு எஸ்கேப் ஆகியிருக்கிறார். மாமாக்குட்டியும் எஸ்கேப்பான மணப்பெண் என்று பலர் கிண்டலடித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.