யாழ் கொட்டடியில் மீட்கப்பட்ட ஹெரோயின்; 3 பேர் கைது

0
140

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயக்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினர் கொட்டடி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருக்கின்றது.

மேலும் சந்தேகநபர்களுக்கு எதிராக எற்கனவே போதைப் பொருள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் புலனாய்வு பிரினால் சுற்றிவளைக்கப்பட்ட 3 இளைஞர்கள்! | 3 Youths Surrounded By Investigation Branch

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதகல் பகுதியிலிருந்து போதைப்பொருள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.