துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் மோசடி!

0
35

துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் தம்பதியரை யக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸில் முறைப்பாடு

கைதான தம்பதியினர் யக்கல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான பணத்தை பெற்றதாக யக்கலை பொலிஸாருக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெரும் தொகை ஏப்பம்விட்ட தம்பதி! பலர் நடுத்தெருவில் | Fraud Of Several Lakhs Of Rupees Couples

பல்வேறு பகுதிகளில் வாடகை அடிப்படையில் பெற்ற வீடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், இவர்கள் துபாய்க்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யக்கல பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் பணிப்புரையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.