யாழ்.இந்துக் கல்லுாரியில் மாணவனை தாக்கிய ஆசிரியர்; நாளை விசாரணை ஆரம்பம்!

0
163

யாழ்.இந்துக் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக அதிகாரிகள் நாளை திங்கள் கிழமை மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.இந்துக்கல்லுாரியில் கல்வி கற்றும் 10ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! | Human Rights Commission Teacher Attacked Student