வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் இருவர் தற்கொலை முயற்சி!

0
78

வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வியட்நாமில் இலங்கை அகதிகள் இருவர் தற்கொலை முயற்சி! | Sri Lankan Refugees Attempted Suicide In Vietnam

ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

306 இலங்கையர்கள் உரிய விசா நடைமுறைகளின் பிரகாரம் மியன்மார் சென்று அங்கிருந்து கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர்.

இதேவேளை தங்களை இலங்கைக்கு மீள அனுப்பும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தாம் அங்கு செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.