வவுனியாவிற்கு விஜயம் செய்ய உள்ள ஜனாதிபதி!

0
174

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இதற்க்கு பலத்த பாதிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், இரானுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாகவும் கலக்கம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.