குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைத் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.