பிக்பாஸ் திருநங்கை ஷிவினுக்கு கதிரவன் மேல் வந்த காதல்!

0
267

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை வாய்ப்பின்றித் தவித்த ஏராளமான திறமைசாலிகளுக்கு வாய்ப்பைத் தேடிக் கொடுக்கும் ஒரு களமாக அமைந்திருக்கின்றது. இதேவேளை இந்நிகழ்ச்சியில் கடந்த 2 சீசன்களாக திருநங்கைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த சீசனில் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார். இருப்பினும் இவர் சில நாட்களிலேயே மருத்துவ காரணங்களுக்காக அந்நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் 6 யில் மலர்ந்த மற்றொரு காதல்! சிக்கி தவிக்கும் ஆண் போட்டியாளர் | Another Love Bigg Boss House Shivin Vj Kathirravan

அதேபோல் இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் திருநங்கை ஷிவின் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.

இந்த சீசனில் தற்போதிருக்கும் போட்டியாளர்களில் இறுதிவரை செல்ல வாய்ப்பிருப்பவர் யார் என கேட்டால் அதில் அதிகமானவர்கள் ஷிவின் பெயர் தான் முதலில் இருக்கும் எனக் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த சீசனில் சிறப்பாக டாஸ்க்கை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 யில் மலர்ந்த மற்றொரு காதல்! சிக்கி தவிக்கும் ஆண் போட்டியாளர் | Another Love Bigg Boss House Shivin Vj Kathirravan

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது உண்மையான காதல் குறித்து ரச்சிதாவிடம் மனம் திறந்து உருக்கமாக பேசி இருந்தார். அதில் தனது பெற்றோர் சொன்ன ஒரே ஒரு காரணத்திற்காக தன்னுடைய காதலை முறித்துக் கொண்டதாக ஷிவின் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கதிரவன் மீது நெடுநாளாக தனக்கு உள்ள கிரஷ்ஷை அவரிடமே வெளிப்படுத்தி உள்ளார் ஷிவின்.

பிக்பாஸ் சீசன் 6 யில் மலர்ந்த மற்றொரு காதல்! சிக்கி தவிக்கும் ஆண் போட்டியாளர் | Another Love Bigg Boss House Shivin Vj Kathirravan

அதாவது இரவில் ஒரு மணிநேரமாக கதிரவனுடன் அமர்ந்து தனியாகப் பேசிய ஷிவின், உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என பலமுறை தனது காதலை சூசகமாக சொல்லியும், “தனக்கு அது புரியல” என மிக்சர் போல் கதிரவன் அளித்துள்ள பதிலை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 யில் மலர்ந்த மற்றொரு காதல்! சிக்கி தவிக்கும் ஆண் போட்டியாளர் | Another Love Bigg Boss House Shivin Vj Kathirravan

அதுமட்டுமல்லாது கதிரவனுக்கு ஷிவினின் காதல் புரிந்து விட்டதாகவும் அவர் ஒரு திருநங்கை என்பதால் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

அத்தோடு பிக் பாஸ் வீட்டில் கதிரவன் காதல் மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணம் என்னவெனில் முதலில் ஷெரினா கதிரவனுடன் நெருங்கி பழகி வந்தார். அப்போது இருவரும் காதலிப்பதாக பிக்பாஸ் வீட்டில் பேச்சு அடிபட்டது.

இதனைத் தொடர்ந்து தீபாவளி சமயத்தில் கதிரவன் தான் தனது கிரஷ் என்று விஜே மகேஷ்வரி ஓப்பனாக பலர் முன்னிலையில் சொல்லி இருந்தார்.

தற்போது அந்த பட்டியலில் ஷிவின் இணைந்திருக்கிறார். இதனால் இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை எனப் பலரும் கூறி வருகின்றனர்.