நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்…

0
285

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலில் நீர் சத்து இருப்பது மிகவும் முக்கியம்.

நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர் காணப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.

தண்ணீர் பற்றாக்குறையால் தலைவலி, மலச்சிக்கல், தோல் வறட்சி, மூட்டு வலி, அஜீரணம், குறைந்த ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னை, மார்பகப் புற்றுநோய் போன்ற பல பிரச்னைகள் வரலாம்.

நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா | Are There So Many Benefits Of Drinking Water

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். உடலில் நீர் சத்து குறைபாடு அனைத்து வகையான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடும்.

மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம்.

நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா | Are There So Many Benefits Of Drinking Water

நன்மைகள்

நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது முதல் உடல் எடையை குறைப்பது முதல் எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.

நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா | Are There So Many Benefits Of Drinking Water

தண்ணீர் குடிப்பதால் பசி குறைகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். இதனால், செரிமான அமைப்பை மேம்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது.

உடலில் நீரிழப்பு காரணமாக, சோர்வு ஏற்படுகிறது. சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும்.

சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், தண்ணீரை அருந்த வேண்டும். மூளை திசுக்களில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. நீரிழப்பு காரணமாக, உடலுடன் சேர்ந்து, மூளையும் மன அழுத்தத்தை உணர்கிறது. எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதன் மூலம், டென்ஷனைக் குறைக்கலாம்.

நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா | Are There So Many Benefits Of Drinking Water

நீர் சத்து பற்றாக்குறையால், முடி மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறத் தொடங்குகிறது.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது முடியின் வறட்சியைப் போக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா | Are There So Many Benefits Of Drinking Water

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வளர்சிதை மாற்ற விகிதம் அதாவது மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் காரணமாக செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் உடனடியாக குறைந்தது 3 டம்ளர் குடிக்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். தண்ணீர் குடித்த 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக வேறு எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.